உலக தண்ணீர் தினம்.. உய்யட்டும் உலகம்..!
- Siva Apt
- Mar 22, 2021
- 1 min read
இருக்கும் இடத்தில் உள்ள இயற்கையை அழித்து
விண்வெளியில் வாழ இடம் தேடும் மனித இனம் யாவும்
தாயை இழந்த சேயை போல நீரை இழந்து தாகத்தால் மாண்ட காலங்கள் போதும்...
நன்னீரை தொலைத்து கண்ணீரில் கரையும் மனித இனத்தின் காலம் மாறட்டும்...
பொன் பொருள் நிலத்திற்கு போர்மூண்ட காலம் கடந்து
நீருக்காய் போர் தொடங்கும் காலம் வெகு தொலைவில் இல்லை...
உன் உயிரினை காக்கும் வழியை நீ அறிந்தால்
அதை உலகிற்கும் கற்றுக் கொடு...
தண்ணீருக்காக கண்ணீர் விட வேண்டிய காலங்கள் மாற வேண்டுமெனில்...
மனிதா நீ முதலில் மாற வேண்டும்...
சிறுக சேமித்து சிக்கனமாய் பயன்படட்டும் என்றே
நன்னீரை புதைத்தும் உவர்நீரினை கடலாய் உமிழ்ந்தும் வைத்தான் இறைவன்...
ஆறறிவு கொண்டும் அறிவிலி மூடர்களாய்
இயற்கையை அழித்துக்கொண்டு இருக்கும் நமக்கு புரிவதில்லை
நம் எதிர்கால சந்ததியினருக்கு வாழும் போதே
நரகத்தை காட்ட ஆயத்தம் ஆகி கொண்டு இருக்கின்றோம் என்று...
ஆதலால் அளவோடு பயன்படுத்தி அறிவோடு வாழ பழகுவோம்..
கண்டங்கள் பல கடந்து தண்ணீரை சேமித்து உலகம் காத்திட ஒன்றாய் கைகோர்ப்போம்...!!!
தீரா நந்தன்- கோவை

Comments