ஈசாவை நாம் ஏன் எதிர்க்க வேண்டும்?
- public journlists
- Jan 25, 2021
- 6 min read
நேற்று ஈசா யோக மையத்தின் கூட்டத்தால் தாக்கப்பட்ட வெள்ளியங்கிரி மலை பழங்குடியினர் சங்கத்தின் காளியம்மாள் எவ்வளவு முக்கியமானவர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள் இதுவரை மூன்று பேர் இந்த போராட்டத்தில் இறந்துள்ளனர்.

சமூக ஆர்வலர் ராஜேஸ்குமார் கொலை..!
பழங்குடி மக்களும் அருந்ததியின மக்களும் ஒன்றினைந்து தங்களது 44.30 ஏக்கர் நிலங்களை மீட்க ஈசாவுக்கு எதிராக பல ஆண்டுகளாக போராடி வுருகின்றனர். இந்த நில மீட்பு போராட்டத்தினை முதன் முதலாக துவக்கியவர் அதற்க்காக தனது உயிரையும் விட்டவர் அமரர் திரு. ராஜேஸ்குமார் அவர்கள். எனவே அவர்களை பற்றி பேசவேண்டியது கட்டாயமாகிறது. ராஜேஸ்குமார் தான் கொலை செய்யப்படும் வரை அந்தப்ப்குதியில் பழங்குடியின மக்களுக்காக சிறப்பாக பனியாற்றிவர். இந்த பதிவில் பழங்குடிமக்கள் நேரடியாக சொன்ன கருத்துக்களை பதிவு செய்துள்ளேன்.

வி.கே. முத்துசாமி கவுண்டர் நிலம்
கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரம் முள்ளாங்காடு வனத்துறையின் சோதனைசாவடிக்கு எதிரில் அமைந்துள்ளது. வி.கே. முத்துசாமி கவுண்டர் அவர்களின் நிலம். உள்ளூர் வாசிகள் அமெரிக்க கவுண்டர் இடம் என அழைக்கின்றனர். இந்த இடத்தை கடந்த 1961 ஆண்டு நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் தமிழக அரசு உபரி நிலமாக அறிவிக்கிறது. இந்த நிலங்களை முத்துசாமி கவுண்டர் அவர்களிடமே வேலை பார்த்து வந்த பழங்குடியினர் மற்றும் அருந்ததியினர் மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.
அரசு அதிகாரிகளின் மோசடி:
கடந்த 1992ம் ஆண்டில் இக்கரை போளுவாம்பட்டி கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலராக இருந்த திரு.சுப்பையா மற்ற உயர் அதிகாரிகளின் துனையோடு பழங்குடி மக்கள் பயன் படுத்தி வந்த நிலங்களை பல்வேறு தனி நபர்கள் பெயரில் பட்டா போட்டு அபகரித்து கொண்டனர். அதாவது நிலம் பழங்குடியினர் மற்றும் அருந்ததியினர் மக்கள பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், ஆவணங்களில் பெயர் மாறி விடுகிறது. இப்படி ஒரு மோசடி தெரியாமல் இருந்த நிலையில், நில சீர்திருத்த துறை உதவி ஆணையாளர் ஈரேடு அவர்கள் நேரடி ஆய்வில் நிலங்களை பார்வையிட வரும் போதுதான் இந்த விவரமே தெரிய வருகிறது. இதே காலகட்டத்தில்தான் ஈசாவிற்கும் இந்த நிலங்கள் மீது ஒரு பார்வை வருகிறது.
2007ஆம் ஆண்டில் தங்களை அதிகாரிகள் ஏமாற்றியது தெரிந்து அங்கு பழங்குடி மக்களுக்காக சேவை புரிந்து கொண்டிருந்த வினோபாவே பூமிதான இயக்கத்தை சேர்ந்த M.ராஜேஸ் குமார் என்பவரை அனுகினர் பழங்குடி மக்கள். ராஜேஸ்குமார் அந்த பகுதிகளில் மிகச்சிறப்பாக பல ஆண்டுகளுக்கு மேலாக பழங்குடி மக்களுக்காக சேவையாற்றி வந்தவர். அப்பகுதிகளுக்கு நீண்ட நாட்களாக இல்லாத பேரூந்து வசதி சென்று சேர வைத்தவர். இன்றையா ஈசா யோகமையத்திற்கு விடப்பட்டுள்ள ஈசாவிற்கானதல்ல, தாணிக்கண்டி, மடக்காடு போன்ற கிராம மக்களுக்காக விடப்பட்டது. பட்டியார் பதி பழங்குடியின கிராமத்தில் ஆரம்பபள்ளி வருவதற்கும் ராஜேஸ் குமார் போராட்டமே மிக முக்கியமான காரணம். இது தவிர குடும்ப அட்டை, சாதி சாண்றிதழ், இலவச கலர் டீவி என பல்வேறு அரசின் திட்டங்கள் அந்த பகுதியில் வசித்து வந்த பழங்குடியின மக்களுக்கு செய்து வந்தவர்.
ராஜேஸ்குமார் பழங்குடி மக்கள் ஏமாற்றப்பட்ட விவகாரம் தெரிந்தவுடன்ம் சற்றும் தாமதிக்காமல் பல்வேறு அரசு துறைகளுக்கும் இது தொடர்பாக மனு அளித்துள்ளார் தொடர்ந்து நில சீர்திருத்த ஆணையர் சென்னை, முதலமைச்சர் தனிபிரிவு, தமிழக ஆளுநர் என தொடர்ச்சியாக மனுக்களை அனுப்பியதோடல்லாமல் பழங்குடி மக்களை அழைத்து நேரடியாக சென்னைக்கே சென்று பல்வேறு அரசு அலுவலங்களுக்கு அலுத்தம் கொடுத்துள்ளார். அப்போதைய காலகட்டத்தில் ஈசா யோகமையத்திற்கும் தி.மு.க. ஆட்சியில் உள்ளவர்களுக்கும் நல்ல தொடர்பு இருந்ததால் அரசு அலுவலர்கள் அந்த நிலம் தொடர்பான விவரங்களில் தலையிட விரும்பவில்லை. இந்நிலையில் ராஜேஸ்குமார் நேரடியாக சென்னை சென்று அப்போதைய எதிர்கட்சி தலைவர் மறைந்த முதல்வருமான செல்வி. ஜெயலலிதா அவர்களை சேரில் சந்தித்து இந்த நில பிரட்னையில் தலையிட கோரிக்கை வைத்ததன் விளைவாக. ராஜேஸ்குமார் புகார் மீதான விசாரனையை நடத்தி விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய ஈரோடு உதவி ஆணையாளர் அவரகளுக்கு 21.01.2008 அன்று உத்திரவிட்டார். ஆனால், 25.01.2008 அன்று ராஜேஸ்குமார் ஈசாவிற்கு அருகில் உள்ள நீலியாறு அணைக்கட்டில் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார். காளியம்மாள் என்ற பழங்குடி பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பால் அவர் கணவரே வெட்டி கொன்றதாக வழக்கு தொடரப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட பழனிச்சாமி குற்றமற்றவர் என நீதிமன்றம் விடுதலை செய்துவிட்டது. ஈசா யோக மையம் தனது விழாக்களுக்கு 44.30 ஏக்கர் நிலங்கலை பயன்படுத்தி வந்தது. 2013 ம் ஆண்டில் வெற்றிச்செல்வன் வழக்கிற்கு பின்னர்தான் சிவராத்திரி நடத்தும் இடத்தை மாற்றியமைத்துள்ளது என்பது குறிப்பிடத்துக்கது.
காளியம்மாள் பதில்
ராஜேஸ்குமார் கொலைக்கு காரணமாக சொல்லப்பட்ட காளியம்மாளை நேரடியாக சென்று அவரிடமே ராஜேஸ் குமார் கொலை பற்றி கேட்டோம். ராஜேஸ்குமார் ரொம்ப நல்லவருங்க ஆரம்பத்துல எங்க அப்பாதான் அவருகூட போய்ட்டு வந்துகிட்டு இருப்பார். சாரியாகூட அப்பல்லாம் பேசினது கூட கிடையாது. நான் எங்க வீட்டுக்காரர் எல்லாம் தோட்ட வேலைக்கு போவோம். அப்புறம் கொஞ்ச நாள் கழிச்ச இந்த நில விவகாரம் வந்தப்ப அவரு நடத்துன போராட்டத்துல கலந்துக்கிட்டேன்க, அப்ப எங்க பழங்குடி மக்களுக்கிட்ட நீங்களும் நிறைய அரசு அலுவலகங்களுக்கு போகனும் நீங்க சொந்தமா உங்க பிரச்னைகல தீர்க்கணும்னு சொல்லுவார்ங்க. அப்படிப்பட்ட நல்லவரோட சாவுக்கு ஈசாவுல ரொம்பகாலமா வேலை பாக்குற ரவி என்ற ஆளுதான் இத்தனைக்கும் காரணமுங்க ஈசாவுக்கு தேவையான மணலை சுத்துல இருக்குற ஆத்துகுள்ள இருந்து மணலை அள்ளி கொடுக்கிறதுதான் அந்தாளோட வேலைங்க. மணல் ஆத்துல அள்றத வெளியில் தெரியாம பாத்துகிறதுக்காக சாராயத்த வாங்கி சும்மாண்ணாளும் எங்காளுகளுக்கு கொடுப்பாருங்க. ஈசாவுக்கு எங்க ஏரியாவுல வேறு யாரும் வந்து எங்க மக்களை பார்க்க கூடாது அவங்களுக்கு நல்லது செய்யக்கூடாது எப்பவும் ஈசா கட்டுப்பாட்டுக்குள்ளேயே வச்சுக்கணும்னு நினைப்பாங்க அதுக்கு ராஜேஸ்குமாரு இடைஞ்சளா இருந்தாருங்க கூடவே தாணிக்கண்டி வழிப்பிரச்னைல ஈசாவ எதுத்து நின்ன முத்தமாள் எங்ககூட சுத்துனது புடிக்கலங்க அதுனால ரவி மூலமா சாராயம் வாங்கி கொடுத்து இல்லாததும் பொல்லாததையும் சொல்லி எங்கணவரை இந்த கொலையை செய்ய வச்சதே அவருதாங்க. அவரு கொலையானப்ப வேற யாரும் எனக்கு சப்போர்டுக்கு வராம பாத்துகிட்டாங்க எம்புருசன் மேல மட்டும் கேஸ் போட்டாங்க ரவிய விசாரிக்க கூட இல்லைங்க என் வார்தைய யாரும் நம்பளைங்க , எம் மேல அநியாயம பழி போட்டு அந்த நல்லவரை கொன்னுட்டாங்க, அப்ப என்னோட மூனு பிள்ளைகளையும் தூக்கீட்டு தனியா வந்தவதானுங்க இப்பவரைக்கும் அந்தாளோட(கனவர்) முகத்துல கூட முழிக்கலங்க, தனியா இந்த எட்டு வருசம் கஸ்டப்பட்டு என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டேனுங்க. மத்த ரெண்டு பசங்களும் நல்லா வளர்ந்துட்டாங்க இனி அவரோட சாவுக்கு நியாயம் கிடைக்கிற வரைக்கும் விடப்போவதில்லைங்க என்று முடித்தார் கோபம் கலந்த கண்ணீரோடு.
இப்போதும், காளியம்மாள் சொன்ன அந்த ரவி அதே ஈசாவில் டிராக்டர் வைத்து மணலை ஓட்டிக்கொண்டுதான் உள்ளார். ஜக்கி வாசுதேவ் ஒரு கார்பரேட் சாமியார் என்பதற்கு சரியான எடுத்துக்காட்டு இந்த ராஜேஸ்குமாரின் மரணம்தான்.
ஏறத்தாழ எட்டு ஆண்டுகள் ஈசாவில் தங்கி வேலை பார்த்தவரும் தற்போது நிலமீட்பு போராரட்டத்தில் முக்கிய பங்களித்தவருமான முத்தாம்மா இன்று ஈசா யோக மையத்தின் மிரட்டல்களுக்கு உட்பட்டு தன்னையும் தன்னை சார்ந்தவர்கள் உயிரையும் காப்பாற்ற வேண்டி காவல் துறைக்கும் முதலமைச்சர் தனிபிரிவிக்கும் புகார் தெரிவித்துள்ளார். ஆனால், இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவர் கூறியது: ஆரம்பத்துல வந்த புதுசுல எல்லாம் எங்க மக்களோட பெரிய ஈசாவுக்கு தொடர்பெல்லாம் இல்லங்க பைக்குலதான் வருவாரு போவரு அதுக்கப்புறம் எங்காளுகளையும் சுத்தியிருந்த அருந்ததியினரையும் வேலைக்கு கூப்டாங்க இங்க இருக்குற பெரும்பாலும் எல்லாரும் விவசாய வேலைதானுங்க அவங்கள் எல்லாம் கூலி பத்துரூவா அதிகமா கொடுக்குறோம்னு கூப்பிட்டாங்க, எல்லாரும் போனோம் ஆனா நாளடைவில் எங்க மக்களுக்கு சாரயம் சப்ளை அதிகமாச்சு, சுத்தி இருக்குற எந்த விவசாய பூமியிலும் விவசாயம் செய்ய யாரும் போகலை அந்தளவுக்கு ஈசவுல வேலை கொடுத்தாங்க, அந்த பகுதியில யாருக்கு வேலையில்லைன்னு சொன்னா ஈசாவுக்கு போனா வேலை கொடுத்தாங்க. இப்படியே போனதுனால பல கவுண்டருக விவசாயம் செய்யமுடியாம பூமிய விக்க வேண்டியதா போச்சுங்க. ஆனால், இது வெகுநாள் தொடரல தாணிக்கண்டின்னு ஈசாவுக்கு பின்னாடி இருக்குற பழங்குடி கிராமத்துக்கு போற பாதைய முழுசா அடைச்சுட்டாங்க அது மட்டுமில்லாமல் அங்கிருந்த பகவதியம்மன் பழங்குடி மக்கள் கோவிலையும் சேர்த்து வேலிய போட்டு மறைச்சிட்டாங்க இத தட்டிக்கேட்ட ஒரே காரணத்துக்காக என்ன ஊரவிட்டே துரத்துர அளவுக்கு எங்கமக்களுக்கு சாரயத்த வாங்கிக்கொடுத்து மாத்திட்டாங்க, இப்பவரைக்கும் அந்த கோவில் அவங்க கட்டுப்பாட்டுலதான் இருக்கு. அந்த இராஜேஸ்குமார்கிட்ட நாங்க இந்த 44 ஏக்கர் நிலத்த பத்தி சொன்ன உடனே அந்த நிலங்கள மீட்டு கொடுக்க கடுமையா போராடினார். கடைசியா இந்த சம்பவம் நடக்குறதுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி ராஜேஸ்குமார் ஆவணங்கள் வச்சுரந்த வீடு மடக்காட்டுல இருந்தது அந்த வீட்ட , சண்முகசுந்தரம், வெள்ளிங்கிரி என்ற மணியன்,ரவி, ராமன், நாலுபேரும் சேர்ந்து ஒடச்சி அதுல இருந்து ஆவணங்கள திருடிட்டு போயிட்டாங்க, அடுத்த வாரத்துலேயே நான் ஊரில் இல்லாத சமையத்துலதான் அவரைய அநியாயமா கொண்னுட்டாங்க பாவிங்க. இதே மாதிரிதான் சத்திய ஜோதி- காமராஜ் தம்பதியினர் 1995ல் இந்த பகுதிக்கு வந்து மகளிர் சுய உதவுக்குழு ஆராம்பிச்சு ரொம்பகாலமா எங்க மக்களுக்கு நிறைய உதவி பன்னாங்க, ஆனால் அவங்களையும் விடல அவங்களையும் அதிகாரிங்க மூலமா துரத்தீட்டாங்க. அதுக்கப்புறம் ஈசா வச்சதுதான் சட்டம்.

இப்பல்லாம் ஈசால வேலை பாக்குறவங்க வடநாட்டுக்காறங்கதான் அதிகம். ஏன்னா இப்ப அவங்களுக்கு நாங்க தேவையில்ல. ஈசாவுக்கு இங்க இருக்குற நிலங்கள வாங்கனும் அதனால எங்களுக்கு சில உதவிகள் செய்யுறமாதிரி செஞ்சு விவசாய வேலைக்கு போகவிடாம தடுத்துட்டாங்க இப்ப எல்லா இடத்தையும் சேர்த்து வாங்கீட்டாங்க, நாங்க கவுண்டர்கிட்ட வேலைபார்த்திருந்த அவங்க விவசாயம் பன்னீருப்பாங்க ஆனால் முடியில. இப்ப எல்லாரு நிலத்தையும் வாங்கீட்டாங்க. கடைசியா மிச்சமிருக்குறது எங்க நிலம் மட்டும்தான் இப்ப அதுக்கும் ஆபத்து வந்துருச்சு. ஈசாவுக்கு எங்க நிலத்தில் ஒரு செண்ட் கூட விட்டுக்கொடுக்க மாட்டோம்.
வெளிச்சத்துக்கு வந்த ஈசாவின் பினாமி சொத்துக்கள்.
(அ)மேற்படி நில ஒப்படை முறைகேடுகள் தொடர்பான விசாரணை 2006 முதல் நாளது தேதி வரை நிலுவையில் இருந்து வருகின்ற சமயத்தில் இவ்விவரங்கள் அனைத்தினையும் மறைத்து 2013 முதல் 2015 வரை பல்வேறு நபர்களுக்கு நிபந்தனை பட்டாவினை அயன் பட்டாவாக மாற்ற தடையில்லா சான்று வழங்கியுள்ளனர். இது முறைகேடனாதாகும் ஆகவே இத்தடையின்மை சான்றையும் அதன் மூலம் நடைபெற்ற உரிமை மாற்ற பரிவர்த்தணைகள் அனைத்தினையும் இரத்து செய்யுமாறு வேண்டுகிறோம்.
(ஆ)மேற்படி முறைகேடாக தடையில்லா சான்று வாங்கி உரிமை மாற்றம் செய்ததன் பின்னணியில் மேற்படி கிராமத்தில் இயங்கி வரும் ஈஷா பவுண்டேசன் என்ற யோகா மையமே உள்ளது. மேற்படி தடையிண்மை சான்று வாங்கி பரிவர்த்தணைகள் செய்த அனைத்து ஒப்படைவு நிலங்களும் ஈஷா நிறுவனத்தின் பினாமி பெயர்களிலேயே வாங்கியுள்ளனர்.
(இ)1077/1பி காலையில் கிரைய பரிமாற்றம் பெற்ற உமா, அவரது கணவர் சுந்தர்ராமன் மற்றும் அருள்ஜோதி ஆகியோர் ஈஷா யோக மையத்தில் வசித்து வருபவர்கள் ஆவார்கள். அவர்களுக்கு அந்த முகவரியிலேயே வாக்காளர் அடையாள அட்டை உள்ளது. அவர்கள் கிரய பத்திர எண்கள். 1133/2013, 1091/2013, 8658/2014, 1092/2013, 1431/2013, 649/2013, 650/2013, 4438/2013, 4439/2013 படி ஒப்படைவு பெற்ற சிலரிடமிருந்து கிரையம் பெற்றுள்ளனர். ஆனால், மேற்படி நபர்கள் உண்மையை மறைத்து கரூர் மற்றும் சென்னையில் வசிப்பதாக போலி ஆவணங்களைக் காட்டி கிரையம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு கிரயம் செய்து கொடுத்த ஆனந்தி மற்றும் சோலையப்பன் ஆகியோரது நில ஒப்படைவு சட்ட விரோதமாக பெறப்பட்டுள்ளது என மேற்படி நிலச்சீர்த்திருத்த உதவி ஆணையாளரின் அறிக்கையில் கண்டுள்ளது.
(ஈ) 1077/1பி - யில் தலா 0.50 ஏக்கர் நில ஒப்படைவு பெற்ற ஷேக் த/பெ காசிம் மற்றும் முகம்மது அலி த/பெ கோயா ஆகியோர்கள் விற்பனை செய்ததாக கிரைய ஆவண எண்கள். 3438/2015 மற்றும் 2664/2015 பதிவு செய்யப்பட்டுள்ளது.இதில்,மேற்படி கிரையம் செய்து கொடுத்தவர்கள் உண்மையான ஷேக் மற்றும் முகம்மது அலி அல்ல. ஆள்மாறாட்டம் செய்யப்பட்டுள்ளது. அசல் ஒப்படைவு பட்டா இல்லாமலே மேற்படி கிரையம் செய்துள்ளனர். மேலும் இதில் சர்வே உட்பிரிவு எண்கள் மாறுபட்டுள்ளது.
(உ)மேற்படி கிரைய ஆவணங்கள் அனைத்திலும் கிரையம் செய்து கொடுத்த நபர்கள், ஆவணங்கள் மற்றும் காலை எண்களின் உண்மை தன்மை குறித்து தாங்கள் நேரடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். மேலும் பதிவு துறை மூலமாக நடவடிக்கை எடுக்க பதிவு துறைக்கு பரிந்துரைக்க வேண்டுறோம். இவையனைத்தும் பினாமி பரிமாற்றத் தடுப்புச்சட்டத்தின் கீழ் சட்டவிரோதமானாதாகும். தண்டனைக்குரியதாகும். இது குறித்தும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறோம். மேலும் இந்த நில தொடர்பான வருவாய் கோட்டாச்சியர் தலைமையிலான விசாரனையில் கடந்த 3.10.2016 அன்று ஈசா யோக மையத்தினரே பங்கு பெற்றுள்ளனர்.
(ஊ) மேற்படி க.ச. எண்.1081 காலை நிலத்தில் 5.50 ஏக்கர் பரப்பளவில் வாரி- நீர்வழிப்பாதை உள்ளது. இது உதவி ஆணையர், நிலச்சீர்த்திருத்தம், கோயமுத்தூர் அவர்களின் குறிப்பாணை ந.க.எண். 46எம்/எப்.ஆர்.1/17-70/டி நாள்:- 25.07.1989 மற்றும் மேற்படி அலுவலகத்தின் 01.02.1991 தேதிட்ட உத்திரவிலும் கண்டுள்ளது. தற்பொழுது நில ஒப்படைவுக்கு உட்பட்ட க.ச.எண். 1081 /1C பகுதியில் ஈஷா யோகா மையம் வயல்களை மண்ணிட்டு நிரப்பி மிகப்பெரிய மதம் சம்பந்தப்பட்ட பொதுப் பயன்பாட்டு கட்டுமானங்களை கட்டி வருகின்றது. இதிலிருந்து ஈஷா யோகா மையம் வரை தார் சாலை அமைப்பதற்க்காக மேற்ச்சொன்ன வாரி- நீர்வழிப்பாதையினை மண்ணிட்டு நிரப்பி ஆக்கிரமித்து சாலையாக மாற்றி வருகின்றனர். மேற்படி செயலானது தமிழ்நாடு நீர்வழிப்பாதை பாதுகாப்புச் சட்டம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளுக்கும் எதிரானது ஆகும். ஆகவே தாங்கள் நடவடிக்கை எடுத்து 5.50 ஏக்கர் பரப்பளவுள்ள வாரி – நீர்வழிப்பாதையினை மீட்டு பொது மக்களின் பயன்பாட்டிற்கு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
(எ)மேலும் க.ச. எண்.1081/1சி2 காலை நிலத்தில் ஒப்படைவு பெற்ற ஜார்ஜ், டேனியல், நூர்ஜஹான், பி.எஸ்.மணி ஆகியோரது நிலத்தில் தனது பினாமிகளான நடராஜன், சிவசுப்பிரமணியம் உள்ளிட்டோர்களின் பெயரில் வாங்கி மலைத்தள பாதுகாப்பு குழுமம், நகர் ஊரமைப்பு துறை, வனத்துறை உள்ளிட்ட அரசு துறைகளின் அனுமதியில்லாமல் பிராமண்ட பாறைகளை கொண்டு பிராமண்ட நுழைவாயிலை கட்டிக்கொண்டு வருவது தற்போது தெரிய வந்துள்ளது.
கடந்தமாதம் வெள்ளியங்கிரி பழங்குடீயினர் சங்கத்தலைவராக இருந்த பழனிச்சாமி அவர்கள் ஈசாவின் ஆட்களால் தாக்கப்பட்டு மருத்துவமையில்
இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வெள்ளியங்கிரி மலைவாழ் சங்கம் பதிவு செய்யப்பட்டு முத்தம்மாள் தலைவியாக உள்ளார். ஈசாவின் சட்ட விரோத கட்டுமானங்களுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் நடத்திவருகிறார்கள்.

ஈசாவின் பிராமண்ட கற்கள் கொண்ட நுழைவாயில் இப்போது வரை பினாமி பெயரில்தான் உள்ளது என்பதுதான் உண்மை. ராஜேஸ்குமார் கொலை செய்யப்பட்ட அதே பாணியில் என்னையும் கொலை செய்யும் முயற்சி ஏற்கனவே நடைபெற்றது. அதிலிருந்து என்னை காப்பாற்றியதும் பழங்குடி மக்கள்தான். ஈசாவின் அமைந்துள்ள வனநிலங்களையும், நீராதர பகுதிகளையும் ஒருமுறை வருவாய்துறையினர் அளவீடு செய்தாலே மாபெரும் உண்மை வெளிவரும் ஏறத்தாழ 100 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் மீட்கப்படும் சாத்தியமிருக்கிறது.
எப்போது பிறரின் உரிமை நசுக்கப்படும் போது நாம் வேடிக்கை பார்க்கிறோமோ அப்போது நாம் ஒன்றை உணர வேண்டும் அடுத்ததாக நம் உரிமையும் பறிக்கப்படாலம் என்பதையும் நினைவில் கொள்ளலாம்...
மேற்சொல்லப்பட்ட விவரங்கள் வட்டாச்சியர் விசாரனையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Opmerkingen