"பூமி " பசுமைவிகடன் மற்றும் ஹீலர் பாஸ்கர் படம்?
- Siva Apt
- Jan 18, 2021
- 2 min read
Updated: Jan 19, 2021
பொதுவாகவே சினிமா குறித்து எழுதுவதை விரும்பவுவதில்லை ஆனால் அதையும் தாண்டி ஜெயம் ரவியின் 25வது படம் "பூமி" குறித்து எழுத வேண்டியது அவசியமாகிறது.

நீண்ட காலமாகவே நான் கூறி வந்த விசயங்களில் ஒன்று முன்னோர்கள் ஒன்றும் முட்டாள் இல்லை என்று தீடிர் கருத்துருவாக்கம் செய்வதின் பின்னனியில் இருப்பவர்கள் மற்றும் இந்த கருத்தாக்கத்தால் இறுதி பலனை யார் பெறுவார்கள் என்பது குறித்த பார்வை நம்க்கு முக்கியம்....
படத்தின் துவக்கத்தில் செவ்வாய் கிரகம் விஞ்ஞானி நாசா என தொடங்கி ஒரு மாதம் கிராமத்திற்கு போலம் என துவங்கிய போதே இது பசுமை விகடன் கதை என தெரிந்து விட்டது. மரபு வழி அல்லது மண் சார்ந்த விவசாயம் உள்ளிட்ட கருத்துக்களுக்கு மேல் பன்னாட்டு கார்பரேட்டுகள் குறித்த கருத்துக்கள் அதனால் உள்நாட்டு கார்பரேட்டுகள் சரியா என்ற உங்கள் கேள்விகளுக்கு இன்று டெல்லியில் கோடிக்கணக்கான விவசாயிகள் எதற்க்காக 51 நாள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என்று அனைவரும் அறிவார்கள்.
இந்த தலைமுறைக்கு பால்தட்டுப்பாடு குறித்தோ உணவு தானிய தட்டுப்பாடு குறித்தோ தெரிய வாய்ப்பில்லாத காரணத்தால் இது போன்ற படங்களுக்கும் கட்டுக்கதைகளுக்கும் மார்க்கெட் இருக்க வாய்ப்புள்ளது. நீங்கள் யூடியுப் சேனல்கள் மற்றும் பசுமை விகடன் செய்திகளில் வரும் செய்திகளின் பின்னனியை எப்போதாவது ஆராய்ந்து பார்த்திருக்கிறீர்களா, சாப்ட்வேர் வேலையை விட்டு, வெளிநாட்டு வேலையை விட்டு, என வரும் கதைகளுக்கு பின்னால் இருக்கும் உண்மைகளை ஆராய்ந்தால் அதில் காட்டப்படும் பெரும்பாலான நபர்கள் தங்கள் வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை பெருளாதார தேவைகளுக்கு விவசாயத்தை நம்பி இருக்க மாட்டார்கள் அது மட்டுமில்லாமல் பெரும் குடும்ப பின்புலமும் இருக்கும். இந்த உண்மையை ஆராயமல் நடுத்தெருவுக்கு வந்தவர்கள் அதிகம்.
மற்றோரு விசயத்தை இங்கு பதிவு செய்ய வேண்டியது அவசியம், விவசாயம் குறைகிறது என்றால் எப்படி உற்பத்தி பெருகுகிறது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா..? உன்மையை சொல்ல வேண்டுமென்றால் விவசாயம் இலாபகரமாக இருந்த காலம் என்பது ஒரு வகை பன்னை அடிமைகள் காலம், இன்றும் கூலி மிக குறைவாக இருக்கும் தொழில்களில் விவசாயம் தொடர்கிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக கோயில் கலச டூபாக்கூர்,மற்ற யாரையும் விட கோவில் சம்பத்தப்பட்ட வேலைகளில் அதிகமாக ஈடுபட்டிருந்த குடும்பத்தை சேர்ந்தவன் என்ற முறையில் எனக்கு நன்றாக தெரியும் கோவில் கலசங்களில் ஒரு ஐதிக முறைப்படி நவதானிய விதைகள் வைக்கப்படும் அதுவும் சொம்பு அல்லது வெண்கல கலசங்களில் வைக்கப்படும் விதைகள் அதிகபட்சம் மூன்றாண்டுகளி இருந்தாலே அதிசயம் ஒரு வெயில்காலம் கடப்பதற்கு முன்னார் அவைகள் வருத்தகடலை போன்றாதாக மாறி இருக்கும் அதுமட்டுமல்ல இனையத்தில் உலாவரும் கோயில் கருவரைக்கு கீழே இருக்கும் சேமிப்பு கிடங்கு கதைகள் எல்லாம் ஒரு சுத்த கட்டுக்கதை.
எல்லாவற்றையும் விட நேரடி விற்பனை கட்டுக்கதை உன்மையில் ஒரு சந்தை என்பது முதலில் வாங்கும் திறனை அடிப்படையாக கொண்டது. இந்த வாங்கும் திறன் விவசாயத்தை மட்டும் நம்பி இருந்தால் ஒரு போதும் வராது அப்படி வந்தால் அது குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டுமே இருக்கும் பரவலாக இருக்காது. இன்னொரு விசயம் செழிப்பில் ஏழ்மை என்பது விவசாயத்திற்கு உண்டான மாபெரும் சிக்கல் அதிகமாக விழைந்து விட்டது என சந்தோசப்பட முடியாது அங்கே விலை இருக்காது.மேலும் விவசாய உற்பத்தி அந்த நாட்டின் எல்லையை தாண்டி ஏற்றுமதி அளவிற்கு போகும் போது அதற்கேற்ப அளவுகோல் மாறுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக விவசாயம் தண்ணீர் எடுக்காத துறை என்று நீங்கள் நம்பினால் அது மாபெரும் அறியாமையின் வெளிப்பாடு அப்புறம் இந்த கடலில் தண்ணீர் வீனா காலக்குது என்ற அபத்ததை மீண்டும் மீண்டும் நம்புவது பேராபத்து மட்டுமல்ல ஒட்டுமொத்த உயிரியல் சூழலை கெடுக்கும் போக்கும் கூட உலகின் பல வளமான உயிர்சூழல் அழிய காரணமே கடலுக்கு ஆறுகளை சென்று கலக்க விடாமல் செய்ததுதான்.
இறுதியாக இரு விசாயம் பலம்பெருமை அதிகமாக பேசுவது நிச்சயமாக நம் எதிர்காலத்தை நாசமாக்கும் பேராபத்து மேலிருக்கும் விசயங்களை அதிகமாக பேசி நீங்கள் கோழி வளருங்கோ, மாடு வளருங்கோ, விவசாயம் பாருங்கோ நாங்க கம்யூட்டரை தட்டுர வேலைய பாக்குறோம்ன்னு உங்க இடத்த புடிக்கிற கூட்டத்துக்குத்தான் இலாபம், இந்த நாட்டில் சிறு குறு விவசாயிகள் மிக அதிகம் மேலும் வறட்டு கவுரவம் பலரையும்மட்டுமல்ல இந்த ஒட்டுமொத்த சமூகத்தையும் சிக்கலில் சிக்க வைத்துள்ளது என்பதே உன்மை.
எழுத்துப் பிழைகள் மற்றும் இலக்கணப் பிழைகள் உள்ளன
அதில் உங்கள் கவனிப்புப் பட்டியலில் இடம் பெற வேண்டியது