எல்லா திசைகளில் இருந்தும் காற்று வீசட்டும்
- public journlists
- Feb 28, 2021
- 2 min read

எல்லா திசைகளில் இருந்தும் காற்று வீசட்டும் மருத்துவர் தினேஷ் கைது
கோவையில் நக்சல் தடுப்பு பிரிவு அதிரடி, நகசலைட் தொடர்பில் இருந்த பல் மருத்துவர் கைது மூன்று இடங்களில் கைது என பரப்பரப்பாக வந்த செய்திகளுக்கு பின்னால் என்ன இருக்கிறது என்பதை ஆராய்ந்து பார்த்தத்தில் பல்வேறு விசயங்கள் நம்மை ஆச்சரிய்ப்படுத்துகிறது.
பொதுவாக இன்றைய சூழலில் சமூக பணியில் இருக்கும் பலர் மீதும் மாவோயிஸ்ட் மற்றும் நக்சல் தேச விரோத முத்திரைகள் தொடர்பு என்று கூறுவது ஒரு வகையில் அரசின் வாடிக்கையாகி விட்டது. இது போன்ற மிரட்டல்களையும் மீறி செயல்படுபவர்கள் மீது குண்டர் சட்டம் போடுவது போன்ற வேலைகளில் அரசு ஈடுபடுகிறது என்ற குற்றச்சாட்டு தற்போது வரை நீடித்து வருகிறது. சமீப காலமாக அரசியல் சிறைவாசிகள் மிக கடுமையாக நடத்தப்படுவதும் அவர்களுக்கு தேவையான அடிப்படை மருத்துவ வசதிகள் கூட கிடைப்பதில்லை என்ற குற்றச்சாடை மனித உரிமை ஆர்வலர்கள் சுமத்துகின்றனர். இந்த வகையில் தற்போது மாவோயிஸ்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மருத்துவர் தினேஷ் கேரள நீலம்பூர் வனப்பகுதியில் மாவோயிஸ்டுகளை சந்திதார் என 22s வது குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதுவும் 5ஆண்டுகள் கழித்து ஒரு வழக்கில் 22 வது நபர் என்று சேர்த்து கைது செய்துள்ளனர். கடந்த 04.02.2021 அன்று கேரளா தீவிரவாத தடுப்பு காவல்(ATS) பிரிவைச் சார்ந்த காவல்துறையினர் கோயம்புத்தூரில் பல் மருத்துவராக பணிபுரிந்து கொண்டிருந்த, குடியுரிமை பாதுகாப்பு நடுவத்தின் தோழர்.தினேஷ் அவர்களின் மருத்துமனையில் புகுந்து அவரை கைது செய்து கொண்டு சென்றுள்ளனர்.
கடந்த 2016-ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் காவல்துறை நடத்திய போலி மோதல் சம்பவத்திற்காக போடப்பட்ட பழைய வழக்கில் ஐந்து ஆண்டுகள் கழித்து பல் மருத்துவர் தோழர். தினேசை 22-ஆவது குற்றவாளியாக சேர்த்து, சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டம்(UAPA) –இன் கீழ் கைது செய்துள்ளனர்.
சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டம் (UAPA)-இன் கீழ் நாடு முழுவதும் அரசின் கொள்கைகளை விமர்சிக்கின்றவர்கள், சமூக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்படும் கொடுமை தொடர்கிறது.
இதன் ஒரு தொடர்ச்சியாக மாற்றுக் கருத்துள்ள முற்போக்காளர்கள் மாவோயிஸ்டுகள் என முத்திரை குத்தப்பட்டு பலரும் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். சிறுபான்மையினராக இருந்தால் அவர்கள் ஜிகாதிகள் என்ற அடையாளத்தோடு இந்த சட்டத்தில் கைது செய்யப்படுகின்றனர்.
தடா, பொடா சட்டத்தினுடைய எல்லா கூறுகளையும் ஒருங்கே கொண்ட சட்டமாக சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டம்(UAPA) உள்ளது. மேலும், சிறைப்படுத்தப்பட்டவர் பிணை பெறுவதில் பெரும் சங்கடங்களையும், சிரமங்களையும் ஏற்படுத்துகின்ற சட்டமாக இது இருக்கின்றது. குற்றம் சாட்டப்பட்டவரே தன்னை குற்றமற்றவர் என்று நிரூபிக்க வேண்டிய அவல நிலையும் இந்த சட்டத்தில் உள்ளது.
இந்நிலையில் நியாயமான எத்தகைய அடிப்படையும் இன்றி தோழர்.தினேஷ் UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கேரளாவில் சிறைப்படுத்தப் பட்டுள்ளார். இந்த போக்கானது மனித உரிமைகளுக்கும், சனநாயக உரிமைகளுக்கும் எதிரானது.
எல்லா திசைகளில் இருந்தும் காற்று வீசட்டும் மருத்துவர் தினேஷ் கைது செய்யப்பட்டது அவரை அந்தக் கருத்துக்காக தீவிரவாதி, பயங்கரவாதி என முத்திரைக் குத்தி தனிமைப்படுத்துவது, சிறைப்படுத்துவது அரச வன்முறை மற்றும் அப்பட்டமான மனித உரிமை மீறல்





Comments